கைரளியில் கொண்டாட்டம்

குன்னுார்: அருவங்காடு, மலையாள குழுவான அருவங்காடு கைரளி சார்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.

சாண்டா கிளாஸ் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. கைரளி தலைவர் நவீன் ஜேம்ஸ், தலைமையில் கேக் வெட்டப்பட்டது. செயலாளர் ஆண்டனி ஜில்ஷன் வரவேற்றார். பைபிள் வசனங்களை பாபு வாசித்தார்.

கைரளி ஒருங்கிணைப்பாளர் ரிஜில், சந்தோஷ் ஜோசப், வனிதா அமைப்பு செயலாளர் ஜிபி ஜில்ஷன், அஜய், சயூஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நடனம், கானமேளா, கரோல் பாடல் நிகழ்ச்சிகள், விருந்து ஆகியவை இடம் பெற்றது.

Advertisement