வரும் தேர்தலில் அதிக இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெறுவோம்: பினராயி நம்பிக்கை
திருவனந்தபுரம்: வரும் சட்டசபை தேர்தலில், எல்டிஎப் கடந்த முறையை விட அதிக இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் எல்டிஎப்- எனப்படும் இடதுசாரி முன்னணி தலைமையிலான ஆட்சியில் முதல்வராக பினராயி விஜயன் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருகிறார்.கேரள சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் கூடுதல் இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று பினராயி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:
2026 தேர்தலில் 140 இடங்களில் 110 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு எல்டிஎப் செயல்படும். கடந்த முறை(2021) எல்டிஎப் 99 இடங்களை வென்றிருந்தது.நேற்று (ஜனவரி 7) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நான் 50 நாள் சிறப்புச் செயல் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தேன். இந்த இலக்கை எட்ட, அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியின் சாதனைகளையும், அதற்கு முந்தைய நிலையைவிட ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்களையும் ஒப்பிட்டு மக்கள் மீண்டும் எல்டிஎப்-ஐ தேர்ந்தெடுப்பார்கள்.
சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தற்காலிகமானவை என்றும், அவை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்துகிறேன்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
மேலும்
-
'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'
-
வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்
-
மைனாரிட்டி பெயரை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்
-
அரசில் பங்கு இல்லாவிட்டால் அரசியல் கட்சி எதற்கு?
-
312 சவரன் நகை மாயம்; தனி நீதிபதி விசாரணை தேவை
-
தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது