வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துகிறது அமெரிக்கா
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்துள்ள நிலையில் அந்நாட்டு எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் கூறியதாவது: இனி வரும் நாட்களில் வெனிசுலா எண்ணெய் விற்பனையை கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை அமெரிக்கா கணக்குகளில் வைத்து இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா தடை காரணமாக வெனிசுலா சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய போகிறோம். வெனிசுலாவில் இருந்து வரும் கச்சா எண்ணெயை நாங்கள் சந்தைப்படுத்தப்போகிறோம். காலவரையின்றி, விற்பனை செய்யப்போகிறோம்.
நாங்கள் யாருடைய எண்ணெயையும் திருடவில்லை. உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் வெனிசுலா எண்ணெயை விற்பனை செய்வதை மீண்டும் துவங்கப் போகிறோம். அதை வெனிசுலாவின் பெயரில் கணக்குகளில் வைப்போம். வெனிசுலா மக்களின் நலனுக்காக அந்த நிதியை மீண்டும் வெனிசுலாவுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
வெனிசுலாவில் சிதைந்து வரும் எண்ணெய் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், அதன் நலிவடைந்த உற்பத்தியை மீட்டெடுக்க வேண்டும் என அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களை டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதன்காரணமாக, வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா திரும்ப பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் , டிரம்ப் கூறுகையில், வெனிசுலா தனது எண்ணெய் உற்பத்தியில் 50 மில்லியன் பீப்பாய்களை அமெரிக்கா விற்பனை செய்வதற்காக விட்டுக் கொடுக்கும் எனக்கூறியிருந்தார்.
வெனிசுலா நிர்வாகம்
முன்னதாக டிரம்ப் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வெனிசுலாவை அமெரிக்கா எவ்வளவு நாட்கள் நிர்வகிக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். வெனிசுலாவை மீண்டும் கட்டியெழுப்புவோம். நாங்கள் எண்ணெயை பயன்படுத்தப்போகிறோம். எண்ணெயை எடுத்துக் கொள்ளப்போகிறோம். எண்ணெய் விலைகளை குறைத்து வருகிறோம். வெனிசுலாவுக்கு நாங்கள் பணம் கொடுக்கப்போகிறோம். அது அவர்களுக்கு மிகவும் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்ளோ எண்ணை வளத்தை வைத்து கொண்டு ராணுவத்தை பலப்படுத்தாத venizula அதிபர் சரியான tube light...ஒரு நல்ல அதிபர் இல்லனா இப்படித்தான்..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் அமெரிக்கா...
அமெரிக்காவின் முகத்திரை கிழிந்துவிட்டது.மேலும்
-
'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'
-
வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்
-
மைனாரிட்டி பெயரை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்
-
அரசில் பங்கு இல்லாவிட்டால் அரசியல் கட்சி எதற்கு?
-
312 சவரன் நகை மாயம்; தனி நீதிபதி விசாரணை தேவை
-
தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது