பொங்கல் பரிசு வழங்கி எம்.பி., துவக்கிவைப்பு

பனமரத்துப்பட்டி: மல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமை வகித்தார்.


தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலையுடன், 3,000 ரூபாயை, மக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார். தொடர்ந்து மக்களுக்கு, லட்டு, ஜிலேபி வழங்கினார். முன்னதாக எம்.பி., உள்ளிட்ட அனைவரையும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இதில் தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலர் உமாசங்கர், பொருளாளர் வெங்கடாசலம், கூட்டுறவு துணை பதிவாளர் சரவணன், சார் பதிவாளர் மூகாம்பிகை, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement