தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயல்: தங்கவயலில் சாலைப்பணிகள் நடக்க இருப்பதால், இன்று மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தங்கவயல் பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா வெளியிட்ட அறிக்கையில், 'சாலைப்பணிகள் நடப்பதால் ஆண்டர்சன்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வரும் சொர்ணா நகர், சொர்ண குப்பம், விவேக் நகர், விவேக் நகர் எக்ஸ்டென்ஷன், பாரண்டஹள்ளி ஆகிய இடங்களில் இன்று காலை, 10.00 முதல் மாலை, 6.00மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement