சினிமா வாய்ப்பு குறைந்து போனது; ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய காரணத்தால் சர்ச்சை!
-நமது நிருபர்-
''சினிமாத்துறை, சமூகம் சார்பானதாக மாறி விட்டதால் தான் எனக்கு 8 ஆண்டுகளாக வாய்ப்புகள் குறைந்து விட்டன,'' என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பல்வேறு மொழிகளில் இசை அமைப்பவர். ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர்.
அவர் ஒரு ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், ''கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது,'' என்று கூறியிருந்தார்.
''இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்,'' என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
சர்ச்சை பேட்டி
அவரது இந்த பேட்டி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையுடன் தொடர்புடைய பலர், அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூகம் ஒரு காரணியா
எழுத்தாளர் ஷோபா டே கூறுகையில், ''அவரது கருத்து அபாயகரமானது. ஏன் அவர் இப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. நான் கடந்த 50 ஆண்டாக பாலிவுட்டை பார்த்து வருகிறேன். சமூக ரீதியான பதட்டம் இல்லாத ஒரே இடம் பாலிவுட் மட்டும் தான். உங்களுக்கு திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திறமை இல்லையெனில், கிடைக்காது; அதற்கு சமூகம் ஒரு காரணியாக இருக்க முடியாது. இவ்வளவு திறமையான, பக்குவப்பட்ட ஒருவர், இப்படி சொல்லி இருக்கக்கூடாது,'' என்றார்.
பிரபல திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர் கூறுகையில், ''ரஹ்மான் கூறியதை நான் ஏற்க மாட்டேன். சினிமாத்துறை சமூக சார்புடையதாக மாறி விட்டதாக நான் கருதவில்லை. ரஹ்மான் இப்படி ஒன்றை சொல்லி இருக்கிறார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.
அச்சம்
''ரஹ்மான் பெரிய இசை அமைப்பாளர். பலரும் அவரை மதிக்கிறார்கள். பலரும் அவரை நம்மால் கையாள முடியாது என்று அச்சப்படுகிறார்கள். அதனால் தான் பலரும் அவரிடம் இருந்து தள்ளி இருக்கிறார்கள்,'' என்றார்.
நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், ''எனது எமர்ஜென்சி படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்று கேட்கச் சென்றபோது, ரஹ்மான் என்னை சந்திக்கவே மறுத்து விட்டார். பிரசார படத்துக்கு பணியாற்ற முடியாது என்றும் கூறி விட்டார். ரஹ்மான் போன்ற பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட மனிதரை நான் கண்டதில்லை,'' என்றார்.
தினமலரில் எதாவது செய்தி வந்துவிட்டாலே போதும் ஏன் எது என்று உணராமலே திட்டி கருத்துப் போடவே ஒரு கூட்டம் வளர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.
படம் இல்ல பணம் வரல... அதனால் ஏற்பட்ட விரக்தி தான் இந்த ஜோக்கர் பேச்சு... பணம் வந்த போது ஏன் வாய் திறக்கவில்லை.. இப்ப குறை சொல்ற
காதுகள் கிழியும்படியான காட்டொலி எழுப்பும் இசையை, சினிக்கவிதை வார்த்தைகளை வெளியில் கேட்கவிடாத தகர டப்பா உருட்டல்களை எத்தனை காலங்கள்தான் பொறுப்பது? ஆரம்பத்தில் நன்றாக இருப்பதுபோல தெரியும். ஆனால் மெல்லிசையே நிலைக்கும் என்பதை ஏனோ இவர் மறந்துவிட்டார். அதனால்தான் இவரை ரசிகர்களும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மறந்துவிட்டனர் என்று நினைக்கிறன்.
இன்னும் சிலர் இப்படி தான் இருக்கிறார்கள்
அனைவருக்கும் end card என்ற ஒன்று உண்டு.... MSV, இளைய ராஜா.. இப்போது ரகுமான்... கால சக்கரத்தில் இதெல்லாம் நடந்தே தீரும்...
இவரு அடிப்படைவாதி இருக்க இவர் வேண்டிய நாடு ஆப்கானிஸ்தான்.
தமிழக சினிமாத்துறை அதன் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை திராவிட கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்கள் கட்சியை வளர்த்ததும் அதனால்தான். திராவிடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் இருக்குமே தவிர குறைவதற்கு வழியில்லை . இவருக்கு கொடுக்கும் பணத்தில் படமே தயாரித்து விடலாம்.
அரை வேக்காடு என்பதை நிரூபித்து விட்டாரே
ரகுமான் குணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது....நன்றி கெட்ட ஜன்மம்....எவ்வளவு ரசிகர்கள் இவருக்காக பாடுபட்டு , வாழ்த்தி, வெற்றியை கொண்டாடி, அனைவரையும் இந்த காரணத்தை சொல்லி அவமதித்து விட்டார்.....திருந்துங்கள் ரசிகர்களே...
சமீபகாலங்களில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பல பாடல்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை. இசையில் பல சொதப்புகள் உள்ளன. மணிரத்தினம் போன்ற கம்முனிஸ்ட் சிந்தனை கொண்ட டைரக்டர்கள் காரணமாக இருக்கலாம். அதேவேளையில் அவரது பேச்சு, சிந்தனை, செய்கைகள் எல்லாமே மக்களிடையே ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன..
விஸ்வநாதன், இளையராஜா போன்று காலம் கடந்த இசையமைப்பாளராக ஏ.ஆர். ராகுமானும் இல்லை,
அனிருத்தும் இல்லை. பாலிவுட்டில் இந்த மாதிரி கதை தான் இருக்கும்.மேலும்
-
சணல் நாரிழை விலையை கட்டுப்படுத்த கோரிக்கை
-
அமெரிக்க மஞ்சள் பட்டாணி வரி இந்தியா குறைக்க வலியுறுத்தல்
-
5 லட்சம் டன் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய அனுமதி
-
பொருட்களை விற்பனை செய்ய 'ஸ்டார்ட் அப்'களுக்கு பயிற்சி
-
தேர்தல் அறிக்கை முதல் பட்டியல்! அ.தி.மு.க., பழனிசாமி வெளியிட்டார் 5 அறிவிப்புகள்
-
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு... அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு