பெற்றோரை இழந்த வாலிபர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரு கே பெற்றோரை இழந்த வாலிபர், கவனிப்பாரின்றி தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாரம் கிராமத்தில் வசித்தவர் ரஞ்சித், 25; கட்டுமான தொழிலாளி.

10 ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தாயும் இறந்துவிட்டார்.

திருமணமாகாத ரஞ்சித், தாய் இறந்த பின் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பூச்சி மருந்தை குடித்து தற் கொலைக்கு முயன்றார்.

ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement