கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறப்பு

கீழடி: ''கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2014ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற 2025 ஜன.,-ல் ரூ.17.80 கோடி ஒதுக்கப்பட்டு, 67,343 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடந்து வருகின்றன. அகழாய்வு தளம் 2 அரங்குகளாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் அகழாய்வு தளங்கள் கண்ணாடி தளமாக மாற்றப்பட்டு வருகிறது. கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் 2026 ஜன., க்குள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நேற்று பணிகளை அமைச்சர் தங்கம் தென் னரசு பார்வையிட்டார்.

பின் அமைச்சர் கூறியதாவது: திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம், கடல் கடந்து தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின், விரைவில் கீழடிக்கு வந்து திறந்த வெளி அருங்காட்சியகத்தை திறந்து வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement