யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள காடக நல்லியை சேர்ந்தவர் சித்துராஜ், 39; விவசாயி. இதே பகுதியில் இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் மக்கா சோளம் பயிரிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை, சித்து ராஜை துரத்தி தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். அப்பகுதியினர் வனத்துறையினாரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விவசாயியை தாக்கி கொன்ற யானை, மீண்டும் அதே பகுதிக்கு வந்தது. வனத்துறையினர் அந்த யானையை விரட்டினர்.
இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement