தாய்லாந்தில் மேம்பால சாலை மீது கிரேன் விழுந்து இருவர் உயிரிழப்பு

பாங்காக்: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் நோக்கி ரமா 2 என்ற விரைவுச்சாலையை நீடிக்கும் பணி நடக்கிறது. நேற்று இங்கு மேம்பால சாலை கட்டுமான பணி நடைபெற்றது.

அப்போது கிரேன் விழுந்ததில் இரு வாகனங்கள் நொறுங்கின. இதில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு செல்ல முடியாததால் வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதா என்பதை அறிய முடியவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் பிபாத் தெரிவித்தார்.

மேலும் இரும்புத்தகடுகள் தொங்கி கொண்டிருப்பதால் விபத்து நடந்த இடத்தில் மீட்புபடையினர் செல்ல முடியவில்லை என்றும் மற்றொரு முறை கட்டடம் இடியுமா என்பது குறித்தும் தெரிவிக்க மீட்புபணியாளர்கள் மறுத்து விட்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் பாங்காக்கில் இருந்து ராட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் விழுந்தது. இதில் ரயில் தடம்புரண்டு 32 பயணியர் பலியாகினர்.

Advertisement