இது ஒரு அழகிய நிலாக்காலம்.. வரிசை கட்டும் விண்கலம்

நிலவு தொடர்பான ஆய்வு 1959ல் இருந்து நடக்கிறது. நிலவில் விண்கலம், மனிதனை தரையிறக்கியது. ரோவரை இயக்கியது. தண்ணீர் இருப்பது, நிலவின் பாறை, கற்கள் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்தது. நிலவின் மறுபக்கத்துக்கு விண்கலம் உட்பட பல சாதனைகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு 'நிலவை' ஆய்வு செய்யும் பல்வேறு திட்டங்கள் வரிசை கட்டுகின்றன. இவை நிலவு, செவ்வாய் கோளில் எதிர்கால மனித குடியேற்ற திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும். இதில் சில

அமெரிக்கா



நிலவுக்கு 1969க்குப்பின் மீண்டும் மனிதர்களை அனுப்பும் வகையில் 'ஆர்டிமிஸ்' திட்டத்தை அமெரிக்காவின் 'நாசா' தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக 2017ல் 'ஓரியன்' விண்கலம் மட்டும் நிலவுக்கு சென்று திரும்பியது. இரண்டாம் கட்டமாக இந்தாண்டு பிப்ரவரியில் நான்கு வீரர்கள் நிலவுக்கு செல்ல உள்ளனர். ஆனால் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி ஆய்வு செய்து பூமிக்கு திரும்புவர். வீரர்களுடனான தகவல் தொடர்பு, விண்கலம் நிலவில் செயல்படும் விதம் போன்றவற்றை ஆய்வு செய்வதே இதன் நோக்கம்.
Latest Tamil News

* இது தவிர 'நாசா'வின் வணிகப்பிரிவு சி.எல். பி.எஸ்), தொழில்நுட்ப உபகரணங்களை நிலவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை இந்தாண்டு செயல்படுத்துகிறது.

சீனா



நிலவின் தென் துருவத்தில் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியாவின் 'சந்திரயான்' விண்கலம் கண்டு பிடித்தது. நீர் பனிக்கட்டி என்பது குடிநீர், ஆக்சிஜன், எரிபொருள் ஆகியவற்றுக்கு கூட பயன்படுத்தப்படலாம், நீர் பனிக்கட்டியை தேடுதல் உள்ளிட்ட நீண்டகால ஆய்வுக்காக சீனா, 'சாங்கி 7' விண்கலத்தை 2026 ஆகஸ்டில் அனுப்புகிறது.
Latest Tamil News

இந்தியாவின் பங்கு



இந்தியா ஏற்கனவே சந்திரயான் 1, 2, 3 என மூன்று விண்கலங்களை அனுப்பிய நிலையில், சந்திரயான்-4" திட்டத்தை தொடங்கியுள்ளது. இது 2027-28ல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது. இதில் ஒருமுறை மட்டும் ரோவரை தரையிறக்கி ஆய்வு செய்யாமல், நிலவின் மண் மாதிரியை சேகரித்தல், பூமிக்கு கொண்டு வருதல், விண்வெளியில் விண்கலங்களை இணைத்தல் உள்ளிட்ட நீண்டகால ஆய்வு திட்டமாக உள்ளது.

தனியார் நிறுவனங்கள்



புளு ஆர்ஜின், பயர்ப்ளே ஏரோஸ்பேஸ், அஸ்ட்ரோபோடிக் உள்ளிட்ட நிறுவனங்கள் முதன் முறையாக நிலவுக்கு ரோவரை அனுப்புகின்றன. இவை ஒருமுறை தரையிறங்கும் விதமாக இல்லாமல், துருவ வழிசெலுத்தல், துளையிடும். அமைப்புகள், சரக்கு வினியோகம் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News

நிலவின் சிறப்பு



பூமியில் இருந்து நிலவின் சராசரி துாரம் 3.81 லட்சம் கி.மீ., பூமியில் உள்ள ஈர்ப்பு விசை, நிலவில் ஆறில் ஒரு பங்கு இருக்கும். நிலவு ஒருமுறை தன்னைத் நானே சுற்றுவதற்கு ஆகும் நாட்களும், பூமியை சுற்றுவதற்கு ஆகும் நாட்களும் சமம் என்பதால், நிலவின் ஒரு பகுதியை மட்டும் நம்மால் பார்க்க முடிகிறது.

நிலவில் விண்கலம்



உலகின் முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக், 1957) சோவியத் யூனியன் (ஒன்றுபட்ட ரஷ்யா) நிலவுக்கு அனுப்பியது. அடுத்து அமெரிக்கா முதல் செயற்கைக்கோளை (எக்ஸ்புளோரர், 1958) அனுப்பியது. நிலவு ஆராய்ச்சியிலும் போட்டி தொடர்ந்தது. இதில் முதலில் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் (ஹானா, 1939), நிலவில் விண்கலத்தை (ஹானா 9, 1966) தரையிறக்கிய நாடு ரஷ்யா.

நிலவில் மனிதன்



அமெரிக்கா 1969, ஜூலை 16ல் அப்பல்லோ 1 விண்கலத்தை கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், எட்வின் ஆல்ட்ரின் என மூன்று வீரர்களுடன் நிலவுக்கு அனுப்பியது. ஜூலை 10ல் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங், முதலில் நிலவில் காலடி வைத்து வரலாற்றில் இடம் பிடித்தார். இரண்டாவதாக எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார்.

Advertisement