என்.எல்.சி., பொறியாளர் தற்கொலை
நெய்வேலி ஜன. 9-: என்.எல்.சி., பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்கம் 1ஏ,, டிராக் ஷப்டிங் பகுதியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் கோடேஸ்வர ராவ் மகன் கன்கி அன்கம்மா ராவ். 44;
இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 7ல் உள்ள என்.எல்.சி., குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பாக அவரது மனைவி குழந்தையுடன் ஆந்திராவில் உள்ள பெற்றோர் விட்டுக்கு சென்று விட்டார்.
இது குறித்து குடும்ப நல கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இதனால் கடந்த பல மாதங்களாக மனமுடைந்து காணப்பட்ட கன்கி அன்கம்மா ராவ் அவரது வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் நேற்று இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன்ஷிப் சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று கன்கி அன்கம்மா ராவின் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை