கோத்தகிரியில் 13 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டுக்குள் எலும்புக்கூடு

கோத்தகிரி சக்திமலை சாலையில் ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் மேத்யூ என்பவரின் வீடு உள்ளது. மேத்யூ இறந்த நிலையில், குடும்பத்தார் கோவைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அதனால் 13 ஆண்டுகளாக வீட்டு பூட்டி கிடந்துள்ளது.

அந்த வீட்டை வாடைக்கு விடுவதற்காக, கோத்தகிரியை சேர்ந்த சசி என்ற எலக்ட்ரீஷியனை வீட்டை சுத்தம் செய்து, மின் இணைப்பு வழங்க பணிகளை மேற்கொள்ளுமாறு, ேமத்யூவின் மகன் பிரசாந்த் கூறியுள்ளார். அதன்படி நேற்று பணியாளர்கள் வீட்டை திறந்து பார்த்த போது, படுக்கையறை மெத்தையில் ஆண் சடலம் எலும்பு கூடாக கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் படி, போலீசார் ஆய்வு செய்தனர். குடிமகன்கள் நீண்ட நாட்களாக பூட்டி கிட்டந்த வீட்டை பயன்படுத்தி இருக்கலாம்.

அடையாளம் தெரியாததால், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யவும், காணாமல் போனவர்களின் விபரங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement