இந்த ஆட்சி வளர்ச்சிக்கானது அல்ல; சொல்கிறார் ராகுல்

28

புதுடில்லி: பாஜ இரட்டை இன்ஜின் அரசின் ஆட்சி வளர்ச்சிக்கானது அல்ல, அழிவுக்கானது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கை; ஊழல் நிறைந்த ஜனதா கட்சியின் இரட்டை இன்ஜின் அரசுகள் மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன. ஊழல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற விஷமத்தன்மையான செயல்கள், பாஜவின் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் பரவியுள்ளது.

இவர்களின் ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினரின் வாழ்க்கை வெறும் புள்ளி விபரங்களாக மட்டுமே இருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் தான் ஆட்சி நடத்துகிறது.

பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் அரசு கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே. சாதாரண இந்திய குடிமகனைப் பொறுத்தவரையில் இந்த ஊழல் இரட்டை இன்ஜின் அரசு என்பது வளர்ச்சிக்கானது அல்ல. அழிவின் வேகம். தினமும் யாரோ ஒருவருடைய வாழ்க்கையை நசுக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, டில்லி ஆகிய பாஜ ஆளும் மாநிலங்களில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்பி ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement