கிரெடிட் கார்டில் செலவு நவம்பரில் 11.50% அதிகரிப்பு

பண்டிகை காலத்துக்கு பிந்தைய மந்தநிலை இருந்தபோதிலும், இந்தியாவில் கிரெடிட் கார்டு வாயிலாக செலவு செய்தது கடந்தாண்டு நவம்பரில் 11.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'கேர் எட்ஜ் ரேட்டிங்ஸ்' நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 1.89 லட்சம் கோடி ரூபாய், கிரெடிட் கார்டு வாயிலாக செலவு செய்யப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் ஓராண்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், 60 சதவீதம் ஆன்லைன் வாயிலாகவே பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.


தனியார் வங்கிகள் 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பும் முன்பைவிட சற்று அதிகரித்துள்ளது. பெரிய மதிப்பிலான செலவுகளுக்கே கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Latest Tamil News

Advertisement