பங்குச்சந்தை புரோக்கர்களுக்கு குட் நியூஸ்: தொழில்நுட்ப கோளாறு விதிகள் மாற்றம்

பங்குச் சந்தை தரகு நிறுவனங்களில் 10,000க்கும் குறைவான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்பான கடுமையான விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிப்பதாக, செபி தெரிவித்துள்ளது.


இதன் வாயிலாக, இந்தியாவில் உள்ள மொத்த புரோக்கர்களில் 60 சதவீதம் பேர், இனி பழைய கடுமையான விதிகளுக்கு கட்டுப்படத் தேவையில்லை.


மாற்றியமைக்கப்பட்ட விதிகளின் முக்கிய அம்சங்கள்:




* புரோக்கரின் கட்டுப்பாட்டில் இல்லாத வெளிப்புற காரணங்களால் ஏற்படும் கோளாறுகளுக்கு, இனி அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்; வர்த்தகத்தை பாதிக்காத சிறிய அளவிலான தொழில்நுட்ப பிழைகளுக்கும் இனி விலக்கு அளிக்கப்படும்

* தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அது குறித்து தகவல் தெரிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

* அனைத்து எக்ஸ்சேஞ்சுகளுக்கும் தனித்தனியாக புகார் அளிப்பதற்கு பதிலாக, 'சாமூஹிக் பிரதிவேதன் மஞ்ச்' என்ற ஒரே பொதுவான தளம் வழியாக தகவல் தெரிவிக்கலாம்

* கோளாறு ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் புரோக்கர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் அல்லது செயலியில் உள்ள 'பாப்-அப் மெசேஜ்' வாயிலாக முதலீட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

* கோளாறின் தன்மை மற்றும் அது எத்தனை முறை நிகழ்கிறது என்பதை பொறுத்து, அபராதத் தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement