டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது

ஆரம்பத்தில் சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி, 11 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 193 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளு-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
Latest Tamil News

இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு, குறைந்தபட்சமாக 0.69 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.98 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 3 ஏற்றத்துடனும்; 16 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி ஆயில் அண்டு காஸ் குறியீடு அதிக பட்சமாக 0.40 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.26 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Latest Tamil News
வர்த்தகம் நடந்த 3,240 பங்குகளில், 744 ஏற்றத்துடனும்; 2,394 இறக்கத்துடனும்; 102 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக, நிப்டி ஒரு தற்காலிக சரிவை சந்தித்து வருவதை போன்ற தோற்றம் உருவாகியுள்ளது, முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு கீழே வர்த்தகமாவதாலும், மொமெண்டம் இண்டிகேட்டர்கள் பலவீனமாக இருப்பதாலும், நிப்டி இறங்கவோ அல்லது பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் செயல்படவோ வாய்ப்பு அதிக அளவில் இருக்கின்றது. செய்திகள் ஆதரவாக இல்லாவிட்டால் 25,500 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Advertisement