தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

சேலம்: சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்த நரசிம்மன், 22, செல்லக்-கண்ணு, 27, ஈஸ்வரன், 25, ஆகியோர் சேர்ந்து, கடந்த டிச., 22ல் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரை முன்வி-ரோதம் காரணமாக கல், கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இப்புகார்படி பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்ப-திந்து, நரசிம்மன் உள்பட, 3 பேரை கைது செய்தனர். ஏற்கனவே நரசிம்மன் மீது இரு வழக்கு, மற்ற இருவர் மீது, தலா, 3 வழக்-குகள், பள்ளப்பட்டி போலீசில் நிலுவையில் இருப்பது தெரியவந்-தது. இதனால், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி நேற்று உத்தரவிட்டார். இதனால் அவர்கள், ஓராண்டுக்கு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்த சபரிநாதன், 23, கடந்த டிச., 19ல், அங்குள்ள அம்பாள் ஏரி ரோட்டில், கஞ்சா விற்றபோது அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்-பட்டார். அவரிடமிருந்து, 1.400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்-பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாக கூறினார். ஏற்கனவே, 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதனால் அவ-ரையும், குண்டர் தடுப்பு
சட்டத்தில் கைது செய்து, கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement