மாணவி குறித்து அவதுாறு பதிவு: கல்லுாரி முதல்வர் 'சஸ்பெண்ட்'

1

திருநெல்வேலி: கல்லுாரி மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு, ஆபாச கருத்துகள் பதிவிட்ட கல்லுாரி முதல்வர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருநெல்வேலி பழைய பேட்டையில் இயங்கும் 'ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரி'யில் கட்டண உயர்வு குறித்து மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஒரு மாணவி மீது, கல்லுாரி முதல்வர் சுமிதாவும், அவரது கணவர் பொன்னுத்துரையும் சமூக வலைதளங்களில் அவதுாறு, ஆபாச கருத்துகளை பதிவிட்டனர்.

இதுகுறித்து அம்மாணவி, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் படி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார், சுமிதாவையும், வங்கி அதிகாரியான அவரது கணவர் பொன்னுத்துரையையும் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில், மாநில கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகம், சுமிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை நேற்று 'சஸ்பெண்ட்' செய்தது.

Advertisement