சென்சார் போர்டும் மத்திய அரசின் புதிய ஆயுதம்; முதல்வர் ஸ்டாலின்

15

சென்னை: சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில், சென்சார் போர்டும் மத்திய அரசின் புதிய ஆயுதமாகி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் நடித்த, 'ஜனநாயகன்' படத்திற்கு, தணிக்கை சான்று வழங்கப்படாதது, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில், பல காட்சிகளை நீக்க கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில், 'சென்சார் போர்டும்' மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பராசக்தி படத்தை, 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement