காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை
சென்னை: காலை உணவு திட்டத்தை தொடர்ந்து, பள்ளிகளில் தினமும் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' எனப்படும், ஊட்டச்சத்து சிற்றுண்டி வழங்க, சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிச் செய்யும் நோக்கில், மதியத்தில் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்ட செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
சத்துணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மதியம் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கூடுதலாக தினசரி மாலை நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாழைப் பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய மாலை சிற்றுண்டியாக, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' வழங்க வேண்டும் என, பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இனிமேல் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்காமல், உணவகங்கள் என்று அழைக்கலாம், பாடம் சொல்லி கொடுக்க சரியான ஆசிரியர்களும் இல்லை, படிப்பில் ஆர்வம் வராத படி, பிள்ளைகளை தற்குறிகளாக வைத்து கொண்டால், எதிர் காலத்தில் தீமுகாவின் அடுத்தடுத்த வாரிசுகளுக்கு ஓட்டு போட , வசதியாக இருக்கும்.
kazhagam is overdoing it gains lot of money through commission contracts
சாயங்காலம் சாப்புட்டு போய் தூங்கி கொள்ளலாம்.
செவிக்குனவில்லாத பொது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
இந்த திட்டம் எதற்கு என்பது எல்லோருக்கும் தெரியும்..
40000 ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்க தகுதி இல்லை என்றாலும் அரசு பள்ளிகள் பொதுமக்களின் வரிப்பணத்தை களீபரம் செய்து உணவு விடுதிகள் போல இயக்கப்படுகின்றன.
கார்பொரேட் தனியார் பள்ளிகளில் ஏழைகள் படிக்க முடியாது. அதாவது கார்பொரேட் தனியார் பள்ளிகள் கல்லா கட்ட ஒரு
சாராரை குழிக்குள் தள்ள திராவிட மாடல் அரசு கடுமையாக உழைக்கிறது.
Recover Entire& Total 90% Uneanted Freebies from All RulingParties-Leaders let them Recover from Undue Beneficiaries. Till then, DeRecognise All Parties incl Sacking their Govts
காலை உணவும் மாலை உணவும் இனி அரசே ஏற்று நடத்தப்போவதால் இனி ஹோட்டல்களை மூடி விடலாம் தாய்மார்கள் வீட்டிலே சமைக்கவே வேண்டாம் எல்லாம் அரசின் செயலே ஆண்டவா இது என்ன சாப்பாட்டு கூடமா அல்லது மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்கூடமா என்று தெரியவில்லையே திராவிட மாடல் அரசின் செயல் இதுபோன்றுதான் கிராமங்களில் எப்படி டாஸ்மார்க் கடைகளை திறந்து உழவர்களை அழித்ததோ அதே போன்றுதான் இப்போது மாணவர்களுக்கும் ஆபத்து வந்துள்ளதுமேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்