அரையிறுதியில் சிந்து * மலேசிய பாட்மின்டனில்

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் அரையிறுதிக்கு சிந்து முன்னேறினார்.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து 30, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சிந்து 21-11 என எளிதாக கைப்பற்றினார். மறுபக்கம் முழங்காலில் காயத்தால் அவதிப்பட்ட யமாகுச்சி, போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட, சீனாவின் வாங் ஜியியை சந்திக்க உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, இந்தோனேஷியாவின் அல்பியான், பிக்ரி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 10-21 என எளிதாக இழந்தது. இரண்டாவது செட்டில் இந்திய ஜோடி 17-13 என முன்னிலையில் இருந்தது.
இருப்பினும், கடைசியில் 21-23 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 11-21, 23-21 என தோல்வியடைந்தது.

Advertisement