கடந்தாண்டில் 65,005 விபத்துகளில் தமிழகத்தில் 16,553 பேர் உயிரிழப்பு

6


ராமநாதபுரம்: தமிழகத்தில் 2025ம் ஆண்டில் நடந்த 65 ஆயிரத்து 5 சாலை விபத்துகளில் 16 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 195 விபத்துகளும் 50 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் ஜன.,1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. தினமும் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டில் ஜன., முதல் நவ., வரை நடந்த சாலை விபத்துகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 65,005 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 16,553 பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக தினமும் 195 விபத்துகளும், 50 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

விபத்துகளின் எண்ணிக்கையில் சென்னை 3777, செங்கல்பட்டு 3509, கோவை 3406 என முதல் மூன்று இடங்களில் உள்ளன.


இதனால் ஏற்பட்ட அதிக உயிர் பலியில் கோவை 895, திருப்பூர் 774, செங்கல்பட்டு, மதுரை 773 என முதல் மூன்று இடங்களில் உள்ளன.



ஜன., முதல் நவ., வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5000 முதல் 6000 விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே போல் 2024 ல் 67,526 விபத்துகளில் 18,449 பேர் உயிரிழந்துள்ளனர்.2024 விட 2025ல் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

Advertisement