டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அல்பலாஹ் பல்கலை., ரூ.139 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய பங்காற்றிய குற்றவாளிகள் பணியாற்றிய அல் பலாஹ் பல்கலையின் 139 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
டில்லியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தற்காலைப்படை தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை நடத்திய டாக்டர் உமர் உன் நபி மற்றும் அவனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பல்கலை விசாரணை அமைப்பகளின் கண்காணிப்பில் வந்தது. போலீசார் மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் அதன் உரிமையாளர் ஜாவேத் அஹமது சித்திக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான சாத்துக்கள் முடக்கப்பட்டன. கடந்த நவ.,18 ல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில், ஜாவேத் அஹமது சித்திக் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் பல்கலை வளாகத்தில் உள்ள 54 ஏக்கர் நிலங்களையும் முடக்கியது. இதன் மூலம், முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 493.24 கோடி ரூபாய் ஆக உள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தை வெடி வைத்து தகர்க்க வேண்டும். சீனா, இஸ்ரேல், ரஷ்யா இந்த நாடுகள் முதலில் இதைத்தான் செய்திருக்கும். பிறகு தான் விசாரணை.மேலும்
-
ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை: சச்சின் பைலட்
-
பணி நிரந்தரம் செய்யாமல் அமைச்சர் பேரம் பேசுவதா?
-
தமிழர் விரோத கூட்டணி: பா.ஜ., விமர்சனம்
-
த.வெ.க., தேர்தல் பிரசார குழுவில் பிரசார செயலருக்கு இடம் இல்லை
-
அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சி
-
'டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை இரு மடங்கு உயர்த்த வேண்டும்'