குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம்

முதுகுளத்துார்: தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்துார் மாணவர் சிவபாரதி வெண்கலப் பதக்கம் வென்றார்.

கம்பத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சிவபாரதி 17 வயது பிரிவில் 46 முதல் 48 எடை போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றார்.

சிவபாரதியை ஜமாத் தலைவர் காதர் முகைதீன், தாளாளர் ஜஹாங்கீர், தலைமைஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement