தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் விழா
புதுச்சேரி: தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தனது பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை முத்துமாரி முத்தையாசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோவிலில் அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
பின், முத்தியால்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், இளைஞரணி தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.,வினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 5 பேருக்கு தள்ளு வண்டி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்