அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி பழனிசாமிக்கு எதிரான மனு தள்ளுபடி
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதம். அவரது பதவியை ரத்து செய்து, அவருக்கு வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்பப்பெற வேண்டும்' என கூறி இருந்தார்.
இதையடுத்து, 'சூரியமூர்த்தி, அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'அ.தி.மு.க., உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது' எனக்கூறி சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், எந்த கட்சியிலும் சூரியமூர்த்தி இணையவில்லை.
'அதனால், அடிப்படை உறுப்பினர் இல்லை என கூற முடியாது. 'எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி' என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டாரே தவிர, வேறு கட்சியில் சூரியமூர்த்தி இணையவில்லை. எனவே, கட்சியில் இருந்து நீக்கியதும் தவறானது' என வாதிட்டார்.
ஆனால், அந்த வாதங்கள் எதையும் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, சூரியமூர்த்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -
மேலும்
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு