த.வெ.க.,வுடன் புதிய தமிழகம் கூட்டணி?

7

மதுரை: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி :

கடந்த தேர்தல்களில், திராவிட இயக்கங்களுக்கு புதிய தமிழகம் ஓட்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இம்முறை அவர்களுக்கு சேவையாற்ற நாங்கள் தயாராக இல்லை. ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு எங்கள் ஆதரவு இல்லை.

இரு திராவிட கட்சிகளும் வலுவிழந்து விட்டன. கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். கேரளாவில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படுகிறது.

த.வெ.க., முக்கிய நிர்வாகி ஒருவர் எங்களுடன் பேச்சு நடத்தினார். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக, பலமான கட்சியாக த.வெ.க., உள்ளது. ஆட்சியில் பங்கு தருவதாக முதலில் அறிவித்தவர், விஜய்.

அவரது கருத்துக்கு எப்படி வலுசேர்ப்பது என ஒருசில நாளில் அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.

Advertisement