பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் செல்லாததால் தொடரும் நெரிசல்
உடுமலை: மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாமல், ரோட்டிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டுக்குள், டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை.
புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்