காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

1

சென்னை: நுாறு நாள் வேலை திட்டத்தில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, தமிழக காங்கிரசார் சென்னையில் நாளை நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் பங்கேற்கிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, இன்று முதல் பிப்., 25 வரை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாளை அனைத்து மாநிலங்களிலும், மாவட்டத் தலைநகரங்களில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.

அடுத்து 12, 19ம் தேதிகளில், ஊராட்சிகள் அளவில் விளக்க கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வரும் 30ம் தேதி வார்டு அளவில் தர்ணா போராட்டம், பிப்., 7, 15ம் தேதிகளில் மாநில அளவில் போராட்டம், 16, 25ம் தேதிகளில் பேரணி நடத்தப்பட உள்ளன. தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே, நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.

இதற்கு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகிக்கிறார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Advertisement