தணிக்கை சான்று அளிப்பதில் அரசியல் இல்லை: சரத்குமார்

3

கோவை: நடிகரும், தமிழக பா.ஜ., பிரமுகருமான சரத்குமார், கோவையில் நேற்று அளித்த பேட்டி:

யார் எந்த கருத்தில் படம் எடுத்தாலும், சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மத்திய சென்சார் போர்டு வெளிப்படையாக செயல்படுகிறது. நான் நடித்த அடங்காதவன் படம், இன்றுவரை வெளியாகவில்லை.

ஜனநாயகன் விவகாரத்தில் சென்சார் போர்டு மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஆட்சேபனைக்குரிய காட்சிப் பதிவுகள் இருந்தால், மறு ஆய்வுக்கு உட்படுத்தத்தான் செய்வர். இதற்கு முன், தக் லைப் படத்துக்கும் சிக்கல்கள் இருந்தன.

ஜனநாயகன் பிரச்னையை அரசியலோடு இணைத்து முடிச்சு போடக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்., நுழைவதால் மேலும் சிக்கலாகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement