த.வெ.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: விஜய் அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு, 12 பேர் கொண்ட குழுவை, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டசபை தேர்தலை ஒட்டி, த.வெ.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க, சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், தேவைகளையும் அறிந்து தரவுகளை பெற உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக மக்களையும், ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில், த.வெ.க., சார்பில், தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கே.ஜி.அருண்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், விஜய் பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா, சத்யகுமார் ஆகியோருக்கு, கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.