தண்ணீருக்கு பதில் மலர் தோட்டமாக மாறிய புளியங்குளம் கண்மாய்
ராஜபாளையம்: ராஜபாளையம் புளியங்குளத்தில் தண்ணீர் ஒரே மாதத்தில் மலர் தோட்ட மாக மாறி உள்ளதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் தாலுகா அலுவலகம் பின்புறம் புளியங்குளம் கண்மாய் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள இக்கண்மாய் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதில் படர்ந்திருந்த புதர் செடிகள், முட்கள் அகற்றப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக ஆற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டு கண்மாய் மறுகால் பாய்ந்தது. ஒரு மாதத்திற்கு முன் நீர் ததும்பி கடல் போல் காட்சி அளித்த நிலையில் ஆகாய தாமரை வேகமாக பரவியது.
இதனால் தண்ணீர் மட்டும் கண்ணுக்கு தெரியாத அளவில் செடிகள் அடர்ந்து போர்வை போல் போர்த்தி மூடிவிட்டது. இதில் பூக்கள் மலர்ந்து தோட்டம் போல் மாறிவிட்டது.
குமார், விவசாயி: பாசனத்திற்கு ஆதாரமான கண்மாய் பல லட்சம் செலவில் துார் வாரப்பட்டு மராமத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் செலவழித்த வேகத்தில் தண்ணீரை முழுவதும் மூடி படர்ந்து உள்ள ஆகாய தாமரையால் பாசன நீர் வேகமாக ஆவியாவதுடன் இதன் இலைகள் அழுகி தண் ணீரின் தன்மை மாறிவிடும்.
குடியிருப்புகள் கழிவுகள் கலப்பதே இதற்கு முக்கிய காரணம். ஆகாய தாமரைகளால் கண்மாய் கபளீகரம் ஆவதை அரசு தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி