சமையல் போட்டி 

சிதம்பரம்: வீனஸ் பள்ளியில், பெற்றோருக்கான போட்டிகள் நடந்தன.

சிதம்பரம், அம்மாபேட்டை, வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில், பெற்றோருக்கான

நெருப்பில்லா சமையல் மற்றும் கோலப்போட்டிகள் நடந்தன.

இந்த போட்டியை பள்ளி தாளாளர் குமார் துவக்கி வைத்தார். இயக்குனர் முரளிகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, பரதாஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து, வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

தலைமை ஆசிரியர் ஜூலியா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். ஆசிரியர் துர்கா நன்றி கூறினார்.

Advertisement