நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்

32

சென்னை: நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை என்ற பாடலை VIBE WITH MKS கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பாடிய வீடியோ வெளியாகி உள்ளது.


VIBE WITH MKS நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள், பாடகர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். ஏற்கனவே, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய நிலையில் தற்போது இசைக்கலைஞர்களுடன் கலந்துரையாடி முதல்வர் பாடி அசத்தும் வீடியோ வெளியானது. இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் இசை கலைஞர் உடன் இணைந்து பாடியுள்ளார்.

“நான் எம்ஜிஆர் பாடல்களை விரும்பிக் கேட்பேன்; குறிப்பாக 'அச்சம் என்பது மடமையடா' பாடல் மிகவும் பிடிக்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


தமிழகத்தின் ஆன்மா அதன் இசையின் மூலம் பேசுகிறது. அது ஊக்கம் அளிக்கிறது, பாதுகாக்கிறது, பரிணமிக்கிறது. நமது திறமையான இசைக்கலைஞர்கள் சிலருடன் அவர்களின் கைவினை, ஆற்றல், உலகம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நேரத்தைச் செலவிட்டோம்.

அவர்கள் இசையை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் நமது பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்கிறார்கள். அதன் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். கலாசாரத்தைக் கொண்டாடும், ஆர்வத்தை மதிக்கும் மற்றும் உண்மையான கலைத்திறனை அங்கீகரிக்கும் உரையாடல்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இசை கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பாடிய பாடலின் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

https://x.com/mkstalin/status/2011702618524172777?t=pd1JbYAonJzSfpq1Yko13g&s=19

Advertisement