பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

மும்பை: பாலிவுட் நடிகரும், டைரக்டருமான தீபக் திஜோரியிடம் ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீபக் திஜோரியின் 'டாம் டிக் அண்ட் மேரி' என்னும் படத்திற்காக, கவிதா ஷிபாக் கபூர் பௌசியா மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என 3 பேர் அணுகி,தங்களுக்கு டி-சீரிஸ் மற்றும் ஜீ நெட்வொர்க் போன்ற பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, 25 கோடி ரூபாய் பட்ஜெட் படத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தேவையான உறுதி கடிதத்தை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து,கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ. 2.5 லட்சத்தை தீபக் திஜோரி வழங்கியுள்ளார்.
பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர்கள் தீபக் திஜோரியின் அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினர். விசாரணையில், அவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிபுரியவில்லை என்பதும், அவர்கள் கொடுத்த வாக்குறுதி பொய் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தீபக் திஜோரி, தனது புதிய திரைப்படத்திற்கு நிதி பெற்று தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது புகார் அளித்தார். இந்நிலையில் அவர்கள் 3 பேர் மீது மும்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement