டயர், பிளாஸ்டிக் எரிக்க வேண்டாம் வாரியம் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்: டயர், பிளாஸ்டிக், செ யற்கை துணிகள் போன்ற வற்றை, போகி பண்டிகையின்போது எரிக்க வேண்டாம் என, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திகுறிப்பு :
போகிப்பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர், ட்யூப், துணிகள் போன்றவற்றை எரிப்பதால் கடும் காற்று மாசு ஏற்பட்டு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் உருவாகின்றன. மேலும், அடர்ந்த புகையால்போக்குவரத்து மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
போகி பண்டிகைக்கு முன்தினம் மற்றும் போகி நாளில் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் 24 மணி நேர காற்றுத் தர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காற்றுத் தர விபரங்கள் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
எனவே, அனைவரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருட்களை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்