பொங்கல் பரிசு வழங்கல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செம்மார், டி.புதுப்பாளையம், சின்னசெவலை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.

ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். ஊராட்சி தலைர்கள் ஷீபாராணி ஏழுமலை, மணிகண்டன் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், கிளைச் செயலாளர்கள் காத்தமுத்து, பழனி பங்கேற்றனர்.

Advertisement