ரூ.10 கேட்டு தகராறு பிளேடால் கழுத்தில் கீறல்

பொதட்டூர்பேட்டை: செலவுக்காக 10 ரூபாய் கேட்டு தர மறுத்தவரின் கழுத்தில் பிளேடால் கிழித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், 30, என்பவர், நேற்று படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி, 38, என்பவர் அங்கு வந்தார். பாஸ்கரிடம், 10 ரூபாய் தரும்படி பழனி கேட்டுள்ளார்.

தரமறுத்த பாஸ்கருடன், பழனி வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பழனி தன் கையில் வைத்திருந்த பிளேடால், பாஸ்கரின் கழுத்தில் கீறியுள்ளார். இதில், காயமடைந்த பாஸ்கர், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement