நெடுஞ்சாலையோரம் 'மீண்டும்' கட்சிக்கொடிக்கம்பம் 

புவனகிரி: நெடுஞ்சாலையோரத்தில் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு காற்றில் பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரத்தில் சாலையோரம், அ.தி.மு.க., சார்பில் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றி உள்ளனர்.

இதேபோன்று புவனகிரி நகரப்பகுதியில் ஆதிவராக நத்தத்தில் சாலையோரத்தில், தி.மு.க., வினர் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றியுள்ளனர்.

வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement