'இது நம்ம ஆட்டம்' போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், 'இது நம்ம ஆட்டம்' போட்டிக்கு, இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா, 'இது நம்ம ஆட்டம்' ஊராட்சி ஒன்றிய அளவில், வரும் 22 - 25ம் தேதி வரையும், மாவட்ட அளவில், வரும் 30 - பிப்., 1ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளில், 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். ஊராட்சி அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோர், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவர்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும், 16 - 35 வயதிற்கு உட்பட்டோர், www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில், வரும் 21ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement