தீ விபத்தில் பாதிப்பு  பா.ம.க., நிவாரணம் 

கடலுார்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பா.ம.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நெய்வேலி தொகுதி, வல்லம் ஊராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது கூரை வீடு எரிந்து சேதமானது. இவருக்கு கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜெகன், நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன், ஒன்றிய செயலாளர் சிவகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாண்டவராயன், எழில், சவுந்தர்ராஜன், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement