பிரேமலதாவிற்கு வீரவாள் பரிசு  மாவட்ட அவை தலைவர் ராஜாராம் வழங்கல் 

கடலுார்: வேப்பூர் அருகே நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் வீரவாள் பரிசு வழங்கினார்.

வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் தே.மு.தி.க., சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற தலைப்பில் நடந்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த மாநாட்டில் அவைத்தலைவர் இங்கோவன், பொருளாளர் சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நடிகர் சண்முக பாண்டியன் உட்பட பலர் பேசினர்.

கடலுார் வடக்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் நினைவு பரிசாக வீரவாள் வழங்கினார்.

மாநாடு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத், மாவட்ட பொருளாளர் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளை பிரேமலதா பாராட்டினார்.

Advertisement