அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உதவி தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர்.

இதில், 287 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை, பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் வழங்கினார்.

விழாவில், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், ஐக்கிய ஜமாத் தலைவர் நஜீர் உபைதுல்லா, கவுன்சிலர்கள், கணேசமூர்த்தி, அஜீஸ் அகமது, தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள், புருஷோத்தமன், அய்யப்பன், சிவபாலன், கோமு, அலி அப்பாஸ் உட்பட பலர், பங்கேற்றனர். ஆசிரியர் பழனிவேல் முருகன் நன்றி கூறினார்.

Advertisement