புதிய ரேஷன் திறப்பு

கடலுார்: புதிய ரேஷன் கடையை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

கடலுார், வன்னியர்பாளையம் பள்ளிக்கூடத் தெருவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திறந்து வைத்தார்.

பின், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கினார். மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் கிரேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement