பிளாக்கில் விற்க மது பாட்டில் பதுக்கியவர் கைது !

கோவை: பிளாக்கில் விற்க மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி, பிளாக்கில் அதிக விலைக்கு விற்பவர்களை பிடிக்க, மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சாய்பாபாகாலனி, கோவில் மேடு டாஸ்மாக் பகுதியில் சோதனையிட்ட போது, திருவாரூர், வடபதியை சேர்ந்த குமார், 55, என்பவர் சட்ட விரோமாக விற்க பது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 55 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமார் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement