வன்கொடுமை தடுப்பு சட்ட கண்காணிப்பு குழு கூட்டம் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், திருத்தப்பட்ட விதிகள் ஆகியவற்றின் செயலாக்கம், மாவட்ட அளவலான ஆய்வு, வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி மற்றும் மறுவாழ்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலம் நடத்திய விழிப்புணர்வு முகாம்கள் விவரம், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள், செயல்படுத்தும் அலுவலர்கள், அமைப்புகளின் பங்கு மற்றும் பணிகள், வன்கொடுமையால் பாதித்தவர்களின் உரிமைகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement