ஆதியோகி சிலையுடன் கரூர் வந்த ரத யாத்திரை

கரூர்: மஹா சிவராத்திரி ரத யாத்திரை நேற்று கரூர் வந்தது.கோவை ஈஷா யோகா மையம் சார்பில், மஹா சிவராத்திரி விழா பிப்., 15ல் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஆதியோகி

சிலையுடன் கூடிய ரத யாத்திரை, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ரதம், நேற்று கரூர் தின்னப்பா நகருக்கு வந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதியோகி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பிறகு, ரத யாத்திரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்றது.

Advertisement