மூதாட்டியை கட்டி போட்டு நகை பறித்த மர்ம நபர்களின் போட்டோ வெளியீடு

ப.வேலுார் : ப.வேலுார் அருகே, மூதாட்டியை கட்டி வைத்து பணம், நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மர்ம நபர்களின் போட்டோவை போலீசார் வெளியிட்-டுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே நெட்-டையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 75, விவசாயி, இவரது மனைவி ராசம்மாள், 73. இருவரும் தோட்டத்து வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் தனியாக ராசம்மாள் இருந்துள்ளார்.


இரவு, 8:30 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்த ராசம்மாளை, அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி வீட்டுக்குள் கொண்டு சென்-றனர். அவரது கை, கால்களை துணியால் கட்டி-யதில் மயக்கமடைந்தார்.


பின்னர் வீட்டில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய், ஏழரை பவுன் தாலிக்கொடியை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இது குறித்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், மர்ம நபர்கள் இருவர் டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் மொபட்டில் செல்வது பதிவாகி உள்ளது. இவர்கள் குறித்து, அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது அடையாளம் காணப்படவில்லை.
இதையடுத்து ப.வேலுார் போலீசார், மர்ம நபர்-களின் போட்டோக்களை வெளியிட்டு, இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement