ப.வேலுாரில் உணவு வழங்கும் விழா

ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், பசிப்பிணி போக்கும் வகையில் அனைவருக்கும் உணவு வழங்கும் விழா பஸ் ஸ்டாண்டில் நடந்தது.


அரிமா சங்க முதன்மை நிர்வாக அதிகாரி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர்
மோகன், மாவட்ட துாதுவர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர், பொது மக்களுக்கு உணவு வழங்கி விழாவை துவக்கி வைத்தனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பய-ணிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisement